×

“விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டாயம் வாக்குகளாக மாறும்”- தாடி பாலாஜி

 

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டாயம் வாக்குகளாக மாறும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குமரஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு குமாரசுவாமி கோவிலில் நடிகர் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்தார். அப்போது பக்தர்கள் அவருடன் ஆர்வமுடன் குழு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்களுக்கு நடிகர் தாடி பாலாஜி அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாடி பாலாஜி தமிழக வெற்றி கழக தலைவரும் தமது நண்பருமான நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் வெற்றி அடைய வேண்டும் என சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். 

தாடி பாலாஜிக்கு மக்கள் கூட்டம் கூடும் நிலையில், உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்க்கு கூட்டம் வராமல் இருக்குமா எனவும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றும், இந்த கூட்டம் கட்டாயமாக வாக்குகளாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் கட்டாயம் மாற்றம் கிடைக்கும் என்றார். கடந்த 4 ஆண்டுகளில் கொலைகள் நடந்து வருவது சாதனையாக உள்ளதாகவும், ஆணவ கொலைகள், காவல் நிலைய மரணங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் எனவும், இந்த ஆட்சியில் யார் அந்த சார் என்ற கேள்வி உள்ளதாகவும், அது அவர்களுக்கு தான் தெரியும் என நடிகர் பாலாஜி கூறினார்.