☰
×

கார்த்திகா உட்பட 9 பேருக்கு ஜாமின்

 

நாதக நிர்வாகி கார்த்திகா உள்பட 9 பேருக்கும் ஜாமின் வழங்கியது தாராபுரம் நீதிமன்றம். 


தாராபுரத்தில் அக. 2-ம் தேதி நாதக பேனர் வைத்தது தொடர்பாக கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பேனரை அகற்ற முயன்ற போலீசாரைத் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், காவல்துறையினரின் பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அக்.4-ம் தேதி பரப்புரையின்போது முதலமைச்சர் ரோடு ஷோ சென்ற வழியில், நாதகவினர் இடையூறு செய்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இடைத்தேர்தலின்போது முதல்வர் பரப்புரைக்கு இடையூறு செய்ததாக கார்த்திகா உட்பட  12  நாதகவினரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஜாமின் வழங்கியது தாராபுரம் நீதிமன்றம். கார்த்திகா உட்பட 9 பேருக்கு 4 வழக்குகளிலும் ஜாமின் வழங்கி தாராபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  எஞ்சிய 3 பேரின் ஜாமின் மனு நாளை (அக்.23) விசாரணைக்கு வருகிறது.