ஆயுத பூஜை 2026: வழிபாடு நடத்த உகந்த நேரம் இதோ.!!
நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்பட்டாலும், 10வது நாளான தசமி தான், இதன் நிறைவாகும். 9வது நாளில், அசுரனை அழிக்க அனைத்து ஆயுதங்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. அதே ஆயுதங்கள் தான் மக்களை தீய சக்தியில் இருந்து பாதுகாக்கவும் அம்பிகையால் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கலைகளுக்கு, தொழிலுக்கு உதவும் எல்லா கருவிகளையும், ஆயுதங்களையும் பூஜிக்கும் நாளாக ஆயுத பூஜை அமைந்துள்ளது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய
ஐப்பசி 02 (19.10.2026) திங்கட் கிழமை பகல் 12.00 to 2.00
மாலை 06.00 to 08.00
மறு பூஜை செய்ய (20.10.2026)செவ்வாய்க்கிழமை
12:52 to 01.15 மாலை 04.30 to 0600
ஐப்பசி 03 (20.10.2026) செவ்வாய் கிழமை
பகல் 11.00 டு 12:30
மாலை 04.30 Το ௦6.00
இரவு 07.00 Το 08.00
மறுபூஜை செய்ய 21.10.2026 புதன் கிழமை காலை
06.00. To 07:30.
09.15 Το 10: 15
புத்தகங்கள், ஆயுதங்கள், தொழில் தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்யலாம். அபிராமி அந்தாதி படிக்கலாம். சகலகலா வல்லி மாலையையும் பாராயணம் செய்யலாம். சரஸ்வதி பூஜை செய்துவிட்டு படிக்கும் புத்தகத்தை எடுத்து சிறிது நேரம் படிக்க வேண்டும்.
நாளை 10 ஆவது நாள் விஜயதசமி. அன்றைய தினம் வித்யாரம்பம் அல்லது வழிபாடு செய்ய நல்ல நேரம் காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையும், மதியம் 1.35 மணி முதல் 2.55 மணி வரையும், மாலை 4.35 மணி முதல் 5.35 மணி வரையும் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் நேரம் பார்க்க தேவையில்லை. வாகனங்களையும் சேர்த்து பூஜை செய்யலாம். வாகனங்களை துடைத்து அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யலாம்.