☰
×

சரயு நதிக்கரையில் 30 லட்சம் அகல் விளக்குகள்: புதிய கின்னஸ் சாதனை படைத்து அசத்திய அயோத்தி!

 

உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பியதை வரவேற்கும் விதமாக இந்த விழா தீபாவளியையொட்டி நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 10வது தீப உற்சவம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முதல்வர் யோகி ஆதித்யநாத், சரயு நதிக்கரையில் தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினார்.

முக்கிய நிகழ்வாக, சரயு நதிக்கரையில் 30 லட்சம் விளக்குகள் ஏற்பட்டன. தன்னார்வலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு 25 லட்சம் விளக்குகள் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சம் விளக்குகள் ஏற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீபத்திருவிழாவால் அயோத்தி நகரம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலிக்கின்றன.

லேசர் லைட்டுகள், டிரோன்களின் மூலம் ராமாயண வரலாறுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இது பார்ப்போரை பரவசமடையச் செய்தது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச கவர்னர் அனந்திபென் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டு தெய்வீக ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் ராமாயணத்தின் முக்கிய காட்சிகளையும், பிரபு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பும் காட்சியையும் விவரிக்கும் வகையில் 2,100 டிரோன்களைக் கொண்டு பிரமாண்ட வான்வெளி ஒளிக்காட்சியும், 3டி லேசர் காட்சிகளும் நடத்தப்பட்டன.