டாஸ்மாக்கில் கூடுதல் வருவாய்க்கு வழி! தவெக அரசின் அதிரடி திட்டம்
டாஸ்மாக் மூலமாக அரசிற்கு ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூலமாக அரசிற்கு ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுவரை Hot பெட்டிகளுக்கு (cases) தலா 90 ரூபாயும், பீர் பெட்டிகளுக்கு 40 ரூபாயும், ஒயின் பெட்டிகளுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்ட கட்டணம் அரசுக்கு வராமல் வேறு வகையில் வெளியே (கமிஷனாக) சென்றுள்ளது. வேறு வழியில் வெளியே சென்ற தொகை முழுவதும் தற்போது அரசிற்கு நேரடியாக வரும் வகையில் தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது.
தமிழகத்தில் மாதத்திற்கு 88 லட்சம் முதல் 90 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் இவ்வாறு மாதத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. அந்தத் தொகை முழுவதும் தற்போது நேரடியாக அரசிற்கு வருவாய் வரும் வகையில் ஏற்பாடு செய்து மாற்றம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு வருடத்திற்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வரும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.