திருத்தணி முருகன் கோவிலுக்கு 3 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை..!!
Dec 30, 2025, 09:55 IST
திருப்படி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவர் முருகப்பெருமானை தரிசிப்பர். வருகிற 31-ந்தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு தரிசனமும் நடக்கிறது.
விழாவில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.