×

வழக்குப்பதிவு செய்ததால் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர்.. தாம்பரம் அருகே பரபரப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதித்தும்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் ஆட்டோ ஓட்டுநர் ஹரி என்பவர் விதியை மீறி சென்றதால் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அதே இடத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள், தீயை அணைத்து அவரை காப்பற்றியுள்ளனர். மேலும், அவர் உடம்பில் தீக்காயம் அதிகமாக இருந்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.