☰
×

ரயில் பயணிகள் கவனத்திற்கு..! சேலம் வழியாக இயக்கப்படும் 4 ரெயில்கள் ரத்து..!!

 

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 4 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, போத்தனூர்-தன்பாத் அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-16619) வருகிற 28-ந் தேதி, அடுத்த மாதம் (டிசம்பர்) 5, 12 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் தன்பாத்-போத்தனூர் அமிர்த் பாரத் எக்ஸ்பி ரஸ் (வண்டிஎண்-16620) வருகிற 30-ந் தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டியா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-22837) டிசம்பர் 14-ந் தேதியும், மறு மார்க்கத்தில் எர்ணாகுளம்-ஹட்டியா வாராந் திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-22838) டிசம்பர் 16-ந் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. யார்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, 

திருச்செந்தூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56004) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

மறுமார்க்கமாக மாலை 4.30 மணிக்கு புறப்படும் நெல்லை- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (எண்.56003) இன்று முதல் 30-ந்தேதி வரை 5 தினங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் (வ.எண் 56742) செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில், இன்று முதல் 30-ந்தேதி வரை சேரன்மாதேவி- நெல்லை சந்திப்பு இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் (எண் 56743) நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயில் இன்று முதல் 30-ந்தேதி வரை நெல்லை -சேரன்மாதேவி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லைக்கு பதிலாக சேரன்மகாதேவியில் இருந்து ரெயில் இயக்கப்பட உள்ளது.