ரயில் பயணிகள் கவனத்திற்கு..! கோவை – நாகர்கோயில் ரயில் சேவையில் மாற்றம்..!
Aug 3, 2026, 05:20 IST
கோவை மற்றும் நாகர்கோயில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் (வண்டி எண்.16322) மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மாற்றம் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 3 வரை உள்ள சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் நடைபெறும் என தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகுர், சூலூர், சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் தற்காலிகமாக நின்று செல்லாது.
மாறாக, போத்தனுர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.