ரயில் பயணிகள் கவனத்திற்கு..!! ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்திவைப்பு..!
Jul 11, 2026, 11:19 IST
ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வருகிற 15, 18-ந்தேதிகளில் எர்ணாகுளம் டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் (18190) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
மேலும் ஆலப்புழா -தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.