×

பொதுமக்கள் கவனத்திற்கு..! லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க; புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு..!

 

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் லஞ்சு ஒழிப்பு மற்றும் நிர்வாக தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,

எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க அழைக்கவும் 1800 425 1555 (24×7 கட்டணமில்லா எண்),

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றே சொல்லலாம். இந்த அதிரடி அறிவிப்பு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தானே ஒரு அரசு ஊழியரை போல உரிய நேரத்திற்கு அலுவலகம் வந்து பணியாற்றுவது அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொட மாட்டேன் என்று உறுதியளித்துள்ள அவர் ஊழல் அற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.