×

சென்னை மக்கள் கவனத்திற்கு..! 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..! 

 

தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் நேற்று கூறிய​தாவது: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, நடைமேடை 10 மற்​றும் 11-ல் இருந்து இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​கள் வரும் 20-ம் தேதி நள்​ளிரவு முதல் ஏப்​. 5-ம் தேதி நள்​ளிரவு வரை நடைமேடை 5 மற்​றும் 6-ல் இருந்து இயக்​கப்​படும்.

சென்னை கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம் மற்​றும் செங்​கல்​பட்​டுக்கு இயக்​கப்​படும் புறநகர் மின்​சார விரைவு ரயில்​கள் 6-வது நடைமேடை​யிலும், செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரை வரை இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் 5-வது நடைமேடை​யிலும் இயக்​கப்​படும். இந்த 45 நாட்​களி​லும் தற்​காலிக அட்​ட​வணைப்​படி மட்​டுமே மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும்.

புதிய எண்​கள் மற்​றும் கால அட்​ட​வணை​யுடன் 160 மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும். 80 ரயில்​கள் சென்னை கடற்​கரை​யில் இருந்​தும், 80 ரயில்கள் செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்​தும் இரு மார்க்​க​மும் இயக்​கப்​பட​வுள்​ளன.

வேளச்​சேரி- பரங்​கிமலை பறக்​கும் ரயில் தடத்​தில் பாது​காப்பு சோதனை முடிந்​த ​பிறகு, மார்ச் இறு​தி​யில் ரயில் சேவை தொடங்​கும். கிளாம்​பாக்​கம் ரயில் நிலை​யம் பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் திறக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ரயில்​கள் ரத்து செய்​வது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: புறநகர் மின்​சார ரயில் சேவை​களின் புதிய அட்​ட​வணை​யின்​படி, தற்​போது இயக்​கப்​படும் 204 ரயில் சேவை​களுக்​குப் பதிலாக மொத்​தம் 160 ரயில் சேவை​கள் இரு​மார்க்​க​மாக இயக்​கப்​படும்.

செங்​கல்​பட்டு மற்​றும் தாம்​பரம் முதல் கடற்​கரை வரை மொத்​தம் 67 ரயில் சேவை​கள் இயக்​கப்​படும். எழும்​பூர் நிலை​யத்​திலேயே 11 ரயில் சேவை​கள்​ நிறுத்​தப்​படும்​. புறநகர்​ சேவை​கள்​ குறைக்​கப்​பட்​டதால்​ ​பா​திக்​கப்​பட்​ட பயணி களுக்​கு உத​வும்​ வகை​யில்​, தெற்​குர​யில்​வே, சிறப்​பு சேவை​களை இயக்​க பெருநகர ​போக்​கு​வரத்​துக்​ கழகத்​திடம்​ கோரிக்​கை ​விடுக்​கப்​பட உள்​ளது. இவ்​​வாறு அவர்​கள்​ கூறினர்​.