×

பயணிகள் கவனத்திற்கு..! இனி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் எக்மோர் போகாது..!  

 

சென்னை எழும்பூரின் 10வது மற்றும் 11வது பிளாட்பாரமில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பணி, வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் மூன்று ரயில் சேவைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொதிகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 12661) இனி வரும் மார்ச் 17ஆம் தேதி (செவ்வாய்) முதல் ஏப்ரல் 6ஆம் தேதி (திங்கள்) வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து எப்போதும் இரவு 8.02 மணிக்கு இந்த ரயில் புறப்படும். 

நெல்லை எக்ஸ்பிரஸ்: வழக்கமாக, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் இந்த ரயில் (ரயில் எண்: 12632) வரும் மார்ச் 16ஆம் தேதி (திங்கள்) முதல் ஏப்ரல் 5ஆம் தேதி (ஞாயிறு) வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும், எழும்பூர் செல்லாது. தினந்தோறும் இயக்கப்படும் இந்த ரயில் காலை 5.43 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சோழன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் இந்த ரயில் (ரயில் எண்: 22675) வழக்கமாக காலை 8 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். ஆனால், வரும் மார்ச் 16ஆம் தேதி (திங்கள்) முதல் ஏப்ரல் 5ஆம் தேதி (ஞாயிறு) வரை சுமார் 2 மணிநேரம் 15 நிமிடம் தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.   

எனவே, சென்னையில் இருந்து செங்கோட்டை, திருச்சி செல்வோரும்; திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வர இருப்பவர்களும் இதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளலாம்.