மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு! செப்டம்பர் 2-ல் நடக்கும் சிறப்பு முகாம்... என்னென்ன ஆவணங்கள் தேவை?
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென் சென்னை பகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்பு குறை தீர் கூட்டம் தென் சென்னை வருவாய் கோட் டாட்சியர் தலைமையில் “மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்“ வரும் 02.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி (எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் அருகில்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஒளிப்படம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.