×

பக்தர்கள் கவனத்திற்கு..! இனி திருச்செந்தூர் கடற்கரையில் இரவில் பக்தர்கள் தங்க தடை..! 

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமீபகாலமாக மாதந்தோறும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கியிருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இரவில் கடற்கரையில் தங்கி நிலா வெளிச்சத்தில் கடற்கரையில் பூஜை செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதனிடையே, சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு ஜோதிடர் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தகவலின்படி, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் நிலவொளியில் தங்கி, மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் அபரிமித பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பரவி, பவுர்ணமி இரவுகளில் கடற்கரை மக்கள் கூட்டத்தில் நெரிசலாகி வருகின்றது.

ஆனால் சமீபத்தில் இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள், பொருட்கள் காணாமற்போனது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோவில் நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி, இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருச்செந்தூர் கடற்கரையில் யாரும் தங்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.