வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் சிலிண்டர் புக் செய்ய இது கட்டாயம்..!
ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டருக்கு 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது. இந்த நிலையில், இன்று முதல் அமலுக்கு வரப்போகும் புதிய விதிகளால் விநியோக முறையில் இன்னும் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி உங்கள் வீட்டிற்குச் சிலிண்டர் வரும்போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ரகசியக் குறியீட்டைச் சொன்னால் மட்டுமே ஊழியர்கள் சிலிண்டரை ஒப்படைப்பார்கள். இது கறுப்புச் சந்தையில் சிலிண்டர்கள் விற்கப்படுவதைத் தடுக்க உதவும். அதேபோல், ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) பணிகளை முடிக்காதவர்களுக்குச் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் சுமார் 928 ரூபாய்க்கும், வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டர் 2,246 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 10 பிரம்மாண்ட கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியத் துறைமுகங்களை வந்தடைந்துள்ளதால், சிலிண்டர் தட்டுப்பாடு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியையும் 20 சதவீதம் வரை அரசு உயர்த்தியுள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தொடங்கிய பிறகு, 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ வணிக சிலிண்டர் விலை மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை உயர்த்தப்பட்டது. மார்ச் 1 அன்று ரூ.28 முதல் ரூ.31 வரை உயர்ந்தது. மார்ச் 7 அன்று ரூ.114.50 உயர்வு ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்தில் மெட்ரோ நகரங்களில் ரூ.196 முதல் ரூ.218 வரை கூடுதலாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.