கோவை பயணிகள் கவனத்திற்கு..! இந்த 4 ரயில்கள் கோவை செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ..!
கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து தன்பாத்துக்கு 4, 7, 9, 11 மற்றும் 14-ந் தேதி காலை 6 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 13352) கோவை செல்லாமல், போதனூர், இருங்கூர், சூரத்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அவ்வாறு செல்லும்போது போதனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கு (16159) 3, 10 ஆகிய தேதிகளில் இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் ரெயில் பீலமேடு, கோவை வடக்கு ஆகிய ரெயில் நிலையங்கள் செல்லாமல், இருங்கூர், போதனூர், சூரத்கல் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். அவ்வாறு செல்லும்போது போதனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும், திப்ரூகர் கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504) 6, 8-ந் தேதிகளில் திப்ரூகரில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு வரும்போது கோவை செல்வதை தவிர்த்து இருங்கூர், போதனூர் வழியாக இயக்கப்படும். அவ்வாறு வரும்போது போதனூரில் நின்று செல்லும்.
பிலாஷ்பூர் - எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22815) ரெயில் 9-ந் தேதி காலை 8.15 மணிக்கு பிலாஷ்பூரில் இருந்து புறப்பட்டு வரும்போது கோவையை தவிர்த்து இருங்கூர், போதனூர், சூரத்கல் வழியாக இயக்கப்படும். அவ்வாறு வரும்போது போதனூரில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.