சென்னை பயணிகள் கவனத்திற்கு..! இன்று முதல் செப்.6 வரை இரவு நேர ரயில்கள் ரத்து..!
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை, மின்சார ரயில்கள் இயங்கும் தண்டவாளப் பகுதியில் தினசரி இரவு 11:15 மணி முதல் அதிகாலை 4:15 மணி வரை (சுமார் 5 மணி நேரம்) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10:20 மணி முதல் இரவு 11:59 மணி வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் அதிகாலை 3:50 மணிக்குப் புறப்படும் ரயில் ஆகியவை இன்று முதல் செப்டம்பர் 6 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி நேர ரத்து: செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன. எனவே, புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் பொதுமக்கள் இந்த மாற்றங்களைக் கவனித்து, தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.