மக்களே கவனம்..! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!
வங்கக்கடலில் உருவான அர்னாப் மற்றும் முரசு புயல் ஆகியவை ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வரும் 13ம் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது 15 ல் வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி வாக்கில் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.