☰
×

மக்களே கவனம்..!! இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! 

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை பகுதியில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு, 16; கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மக்கினம்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் தலா, 15; கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியில், 14 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்யக்கூடும்.

இதற்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலுார், கரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.