பழனி பக்தர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்..!
Sep 22, 2026, 11:29 IST
பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.
அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 64 நாட்களாக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர்.
பராமரிப்புப் பணியின் முக்கிய பணிகளான புதிய பெட்டி பொருத்தம், சோதனை ஓட்டம் மற்றும் புனரமைப்புப் பணிகள் போன்றவை நடைபெற்றன. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளநிலையில், இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.