கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.38 லட்சம் மோசடி முயற்சி
Jul 6, 2026, 16:02 IST
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38 லட்சம் பண மோசடி செய்ய முயற்சி நடந்திருப்பதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளரின் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரை தவறாக பயன்படுத்தி ரூ.38 லட்சம் பண மோசடி செய்ய முயற்சி செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் ஊழியரின் செல்போன் சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்து மோசடியை அரங்கேற்றியுள்ளனர். தயாரிப்பாளர் போல பேசி ரூ.38 லட்சம் கேட்ட வட மாநில கும்பல் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் புகார் அளித்துள்ளனர்.