காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயற்சி- கத்தியைத் தவறாகப் பிடித்ததால் தப்பிய மாணவி
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு தலை பட்ச காதல் இளைஞர் பேச மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் மேடு தெப்பம் பகுதியில் கல்லூரியில் படிக்கும் மாணவி நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வண்ணார் விளாம்பட்டியை சேர்ந்த பிகாம் பட்டதாரி சூர்யா வயது (22) என்பவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் கல்லூரி மாணவியிடம் பேச முயற்சித்துள்ளார். கல்லூரி மாணவி பேச மறுத்தவுடன் சூர்யா தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து உள்ளார். அதிர்ஷ்டவசமாக கத்தியின் கூர்முனை சூர்யாவை நோக்கி இருந்ததாலும் கத்தியின் பின்புறம் பகுதி கல்லூரி மாணவியின் கழுத்து பகுதியை நோக்கி இருந்ததால் கழுத்து அறுபடவில்லை.
இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட கல்லூரி மாணவி சூர்யாவின் கையை பிடித்து கொண்டதில் கல்லூரி மாணவியின் கைகளில் இரண்டு இடத்தில் இளைஞர் வெட்டியுள்ளார். கல்லூரி மாணவி கூச்சலிட அக்கப்பக்கத்தினர் சூர்யாவை பிடித்து நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கல்லூரி மாணவி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூர்யாவை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். நகர் காவல்துறையினர் சூர்யாவிடம் விசாரணை செய்த போது சூர்யாவின் உறவினர்கள் வீட்டு எதிரே கல்லூரி மாணவி இருந்ததாகவும் உறவினர் வீட்டுக்கு வரும்போது கல்லூரி மாணவியிடம் பேசியதாகவும் பின்னர் இளைஞர் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும் சம்மதம் தெரிவிக்காத அந்த மாணவி இளைஞர் சூர்யாவிடம் பேச மறுத்ததால் ஆத்திரம் கொண்டு கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இளைஞர் சூர்யாவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த இளைஞர் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.