"ரத்து செய்.. ரத்து செய் நீட் தேர்வை ரத்து செய்”- ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
Jul 26, 2026, 13:30 IST
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர், இளைஞர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று (26.07.2026) நடைபெற்றது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை போட்டு மறித்த காவல்துறையினருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆகையால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.