×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் - வைகோ கண்டனம்

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை, தியாகராயர் நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது காலிகள் சிலர் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்.

இதில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனுடைய பின்னணியை சரியாக விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு கடும் கண்டனத்தை மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.