×

அட்லீ - பிரியாவிற்கு 2வது குழந்தை பிறந்தது.. திரையுலகினர் வாழ்த்து..!!

 
இயக்குனர் அட்லீ (Atlee Kumar) மற்றும் பிரியா அட்லீ (Priya Atlee) கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகளுக்கு கபந்த 2023 ஆம் ஆண்டில் மீர் (Meer) என்ற முதல் குழந்தை பிறந்தது. இயக்குனர் அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டில் 'ராஜா ராணி' (Raja Rani) மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய்யுடன் 'தெறி', 'மெர்சல்', மற்றும் 'பிகில்' உள்ளிட்ட தொடர் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் அவர் தென்னிந்திய திரையுலகில் பெய அளவில் பிரபலமானார்.
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார், இது இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது அட்லீ இயக்கத்தில் பான் இந்தியா படம் ஒன்று உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார், மேலும் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா உள்பட மேலும் சில நாயகிகள் நடிக்கின்றனர்.
இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட், சுமார் ரூ.800 கோடி வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 
இந்நிலையில் தற்போது இன்று இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாய் -சேய் இருவரும் நலமாக இருப்பதாக அட்லீ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான முதல் திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.