×

தடகள வீராங்கனை தனலட்சுமியை கதறி அழவைத்த தகவல் – விமான நிலையத்தில் சோகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து திருச்சி விமான நிலையம் திரும்பிய தடகள வீராங்கனை தனலட்சுமி, அக்கா இறந்த செய்தி அறிந்ததும் விமான நிலையத்தில் கதறி அழுத காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி(22). சேகர் – உஷா தம்பதியரின் மகளான தனலட்சுமி சிறந்த தமிழக தடகள வீராங்கனை. இவர் பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறார். ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 400
 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து திருச்சி விமான நிலையம் திரும்பிய தடகள வீராங்கனை தனலட்சுமி, அக்கா இறந்த செய்தி அறிந்ததும் விமான நிலையத்தில் கதறி அழுத காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி(22). சேகர் – உஷா தம்பதியரின் மகளான தனலட்சுமி சிறந்த தமிழக தடகள வீராங்கனை. இவர் பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறார்.

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு அவர் தேர்வாகி இருந்தார். இதில் பங்கேற்க அவர் டோக்கியோ சென்றிருந்தார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி பங்கேற்றிருந்த சமயத்தில் அவர் அக்கா கடந்த 12. 7. 2021 அன்று திடீரென உயிரிழந்துவிட்டார். இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவர் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என்று அவரிடம் அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் யாரும் தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர்.

இந்த நிலையில் டோக்கியோவில் போட்டி முடிந்து தமிழகம் திரும்பினார் தனலட்சுமி. நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கே வரவேற்கத்தக்க அக்கா ஏன் வரவில்லை என்று தேடி இருக்கிறார். அப்போதுதான் அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திடீரென்று இப்படி ஒரு செய்தியை கேட்ட தனலட்சுமி, விமான நிலையத்திலேயே கதறி அழுதார். குடும்பத்தினரும் உறவினர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றினர். பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.