×

வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் - ஒடிசா கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்..!!

 
வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதனை வடிவமைத்துள்ளார். பொதுமக்கள் இந்த மணல் சிற்பத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.