×

ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்?

 

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக துணை தேர்தல் ஆணையம் பானு பிரகாஷ் 2 நாட்கள் சென்னையில் முகாமிட்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள துணை தேர்தல் ஆணையம் பானு பிரகாஷ் நாளை தமிழகம் வர உள்ளார். இதன்படி 11ம் தேதி இரவு சென்னை வரும், 12 மற்றும் 13ம் தேதி சென்னையில் முகாமிட்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

இதன்படி, 12ம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரயில்வே, சிஆர்பிஎப், அஞ்சல், சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட துறையின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து 13ம் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் கழித்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு சென்னை வந்து சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் என்று எதிபார்க்கப்படுகிறது.