×

தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தர்மராஜ் சோலைராஜ் - தினகரன்  வாழ்த்து
 

 

 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜூக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசன் அவர்களும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் அவர்களும் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.