×

“இஎம்ஐ கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்த வங்கி” :தற்கொலை செய்துகொண்ட வீடியோ கலைஞர்!

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் வீடியோ கலைஞர் அஷ்ரப் அன்சாரி.திருவாரூரை சொந்தஊராக கொண்ட இவர் வீடியோ எடுப்பதும், எடிட்டிங் செய்வது என தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஷ்ரப் அன்சாரி இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் அஷ்ரப் அன்சாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி கடன்
 

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் வீடியோ கலைஞர் அஷ்ரப் அன்சாரி.திருவாரூரை சொந்தஊராக கொண்ட இவர் வீடியோ எடுப்பதும், எடிட்டிங் செய்வது என தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அஷ்ரப் அன்சாரி இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் அஷ்ரப் அன்சாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில்
கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி கடன் தவணை தொகைகளை இந்தப் பேரிடர் காலத்தில் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் கூட தனியார் நிதி நிறுவனங்கள் அதை கடைப்பிடிக்காமல் கடன் தொகையைக் கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள். இதன் காரணமாக தான் அஷ்ரப் அன்சாரி மன உளைச்சலில் தனது வாழ்க்கையை முடித்து கொண்டுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவதை போல தற்போது அந்தப் பட்டியலில் புகைப்பட வீடியோ கலைஞர்கள் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.