புதுமணத் தம்பதி திருமணமான கையோடு விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்பு..!
Apr 20, 2026, 13:26 IST
திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பொன்னேரி பகுதியில் விஜய் ரோடு ஷோவில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த வழியாக திருமணம் முடிந்த புதுமணத் தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை அழைத்த விஜய், தேர்தல் பரப்புரை வாகனத்தில் மேலே ஏற்றினார். விஜயைப் பார்த்ததும் புதுமணப் பெண் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். விஜயின் கையைப் பிடித்துக்கொண்டார். இருவரும் விஜய் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். விஜய், மணமக்கள் இருவரின் கைகளையும் உயரே தூக்கி வாழ்த்துத் தெரிவித்தார். விசில் ஊதியும் தனது ஆதரவை மணப்பெண் தெரிவித்தார்.
மணமக்கள் இருவரையும் சிறிது நேரம் ஊர்வலம் அழைத்துச் சென்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.