×

நிறைமாத கர்ப்பிணினு தெரிந்தவுடன் மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதலமைச்சர் பணி நியமன ஆணை..!

 

சென்னை கலைவாணர் அரங்கில் எரிசக்தித் துறையின் சார்பில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் மனிதநேயமான செயல் ஒன்றால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று, கர்ப்பிணியாக இருந்த பெண் பயனாளியிடம் நேரடியாக பணி நியமன ஆணையை வழங்கிய அவர், அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி ஆணைகளை வழங்கியிருக்கிறார். இதன் மூலம் மின்வாரியம் புதுப்பொலிவு பெறும் என்றும், மின்வெட்டு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதலமைச்சர் பணி நியமன ஆணை#Chennai | #CMVijay‌ | #TVGovt | #TVK | #PolimerNews pic.twitter.com/HmVsOhkSTo

— Polimer News (@polimernews) June 24, 2026