×

“இவ்வளவும் பண்ணிவிட்டு ஜாலியாக தியேட்டரில்போய் படம் பார்க்குறாங்க.. மனசாட்சி இல்லையா?”- அருணாச்சலத்தின் தாய் கதறல்

 

தூத்துக்குடியில் உயிரிழந்த விசாரணை கைதி அருணாச்சலம் பெற்றோரை  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பேசினார். ஆறுதல் கூறிய அவரிடம், போலீசார் தாக்கியதில் அருணாச்சலம் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சலத்தின் தாய், “இவ்வளவும் பண்ணிட்டு அவங்க ஜாலியா தியேட்டர்ல விசில் அடிச்சி படம் பார்த்துட்டு இருக்காங்க.. மனசாட்சி இல்லையா அவங்களுக்கு..? இதுவே அவங்க வீட்ல இப்படி நடந்திருந்தா அந்த அமைச்சர் இப்படி தான் படம் பார்த்துட்டு இருந்திருப்பாரா..? நல்ல புத்தி இல்லையா? அவங்க கோடிக்கோடியாக கொடுத்தாலும் எனக்கு தேவையில்லை. சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்யுங்கள். விஜய்யை ஆட்சியிலிருந்து விலக்குங்கள்.

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம், தென்பாகம் காவல் நிலையப் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.  "போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்" என உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் அளித்துள்ள மரண வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.