#BREAKING போர் பதற்றம்... நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த உத்தரவு
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், போர்க்கால ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாக். இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில்,மே 7ம் தேதி அனைத்து மாநில அரசுகளும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மே 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான தாக்குதல் நடைபெறும்போது ஒலிக்கப்படும் அபாய ஒலி சைரன்களை ஒலிக்கவிட்டு ஒத்திகை நடத்த வேண்டும், எதிரிப்படை தாக்குதலில் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-