×

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் நேற்றிரவு தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற 7
 

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் நேற்றிரவு தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை புத்தளம் மாவட்ட கல்ப்பிட்டி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகஇலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,கொரோனா கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள 36 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிக் கருவிகளையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.