×

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு

 

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று இரவு கைது செய்யப்பட்டு 12 தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும்  சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 13 நாள்களாக  போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர்.