☰
×

பாத்ரூம் கதவை தட்டி கைது- காவல்துறை அராஜகம்!

 

சென்னை எழும்பூரில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட வந்த மருத்துவப் பணியாளர்கள் கழிவறைக்குள் சென்ற நிலையிலும் விடாமல் துரத்தி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

ஆளும் தவெக அரசுக்கு எதிராக அனுதினமும் தொடர்ந்து ஏதாவது ஒரு அரசு பணியாளர்களை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி வந்த பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்துக்கு அனுமதி மறுத்த நிலையில் திரண்ட  மருத்துவ பணியாளர்களை கைது செய்த காவல்துறை, பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகமாக நடந்துகொள்வதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாத்ரூம் கதவைத் தட்டிக் கைது செய்கிறார்கள். கைது செய்கிறோம் என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தவெக ஆட்சியில் காவல்துறையினர் அராஜகமாக நடந்துகொள்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கையா? என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.