#BREAKING பொன்முடிக்கு கைது வாரண்ட்!
Aug 6, 2026, 17:42 IST
சைவ, வைணவ சமயங்களை ஆபாசமாக ஒப்பிட்டு பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பேரில், காவல்துறை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், பொன்முடியை கைது செய்து செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த போலீசாருக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.