×

சூரப்பா அறிவிப்பால் கதிகலங்கிய அரியர்ஸ் மாணவர்கள்… தேற்றிய அமைச்சர் அன்பழகன்!

அரியர்ஸ் தேர்வில் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஏ.ஐ.சி.டி.சி எதிர்ப்பு என்று செய்தி வெளியானதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டினது வீணா என்று புலம்பி வருகின்றனர்.கொரோனா காரணமாக பொதுத் தேர்வு நடத்த முடியாத நிலையில் அரசுகள் உள்ளன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு தேர்வைத் தவிர்த்து மற்ற பருவத் தேர்வுகளில் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல், அரியர்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது.
 

அரியர்ஸ் தேர்வில் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஏ.ஐ.சி.டி.சி எதிர்ப்பு என்று செய்தி வெளியானதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டினது வீணா என்று புலம்பி வருகின்றனர்.
கொரோனா காரணமாக பொதுத் தேர்வு நடத்த முடியாத நிலையில் அரசுகள்

உள்ளன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு தேர்வைத் தவிர்த்து மற்ற பருவத் தேர்வுகளில் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல், அரியர்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இது 10, 20 என்று பல ஆண்டுகளாக அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து பலரும் போஸ்டர் ஒட்டினர். சமூக ஊடகங்களில் மனித கடவுள் என்ற அளவுக்கு புகழப்பட்டார்.


இந்த அறிவிப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமியின் மதிப்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இந்த அறிவிப்பில் அரசியல் உள்ளது என்று குற்றம்சாட்டினர். விளம்பரம், சோஷியல் மீடியா பிரசாரத்துக்கு மட்டும் ரூ. 10 கோடியை எடப்பாடி பழனிசாமியின் ஐ.டி-விங் செலவு செய்துள்ளது என்று எல்லாம் எதிர்க்கட்சிகள் கிளப்பி விட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அரியர்ஸ் கிளியர் இல்லையா என்று மாணவர்கள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.


சூரப்பா தன்னுடைய கருத்தை எல்லாம் ஏ.ஐ.சி.டி.இ கருத்தாக திணிக்கக் கூடாது என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும், ஏ.ஐ.சி.டி.சி அனுப்பிய கடிதம் தனக்கு வரவில்லை என்றும் கூறினார். “பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படிதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து விட்டது. அப்படி இருக்கும்போது எப்படி மறுப்பு தெரிவித்து இருக்கும்? மின்னஞ்சலில் கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், அதை அரசுக்கு அனுப்பவில்லை. அப்படி ஒரு கடிதமும் வரவில்லை” என்றார்.


அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாதான் ஏ.ஐ.சி.டி.சி தென் மண்டல கமிட்டியின் தலைவர். அதன் அடிப்படையில் அவர் வெளியிடும் தகவல், ஏ.ஐ.சி.டி.சி-யின் கருத்தாகவே பார்க்கப்படும். இதனால், அரியர்ஸ் கிளியர் ஆகுமா என்று தெரியாமல் மாணவர்கள் கலங்கிப் போய் உள்ளனர். இந்த விவகாரத்தில் விரைவில் தெளிவான முடிவை அரசு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.