×

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைன் மூலமே நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி, கடந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு கோப்புகள் பிடிஎஃப் வடிவில் கல்லூரியின் இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன, அதனடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால் இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டன. அதன் படி, ஒரு சில பல்கலைக்கழகங்களில் தேர்வும்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைன் மூலமே நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி, கடந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு கோப்புகள் பிடிஎஃப் வடிவில் கல்லூரியின் இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன, அதனடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால் இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டன. அதன் படி, ஒரு சில பல்கலைக்கழகங்களில் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் 21ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஜூலை 17 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வு குறித்த முழு விவரங்களை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.