இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி - மன்னிப்பு கேட்டது ACTC நிறுவனம்
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரினர்.
'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் சென்னை பனையூரில் ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழையின் காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அருகே உள்ள பனையூரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் பதிவு செய்யப்பட்டன.
டிக்கெட் பெற்றுக்கொண்டு ரசிகர்கள் இசைக்கச்சேரியில் நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாமல் பல மணி நேரம் காத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது . அத்துடன் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை என்றும் கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.