×

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஆயுதப்படை காவலர் கைது!

 

சென்னையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டி பணம் பறித்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்த ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார். 

சென்னை மதுரவாயல், ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் வசித்து வரும் 32வயது இளம்பெண் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த 17ந் தேதி காக்கி பேண்ட் மற்றும் டீ ஷர்ட் அணிந்தபடி "டிப் டாப்" உடையில் வந்த மர்ம நபர், நான் தனிப்படை போலீஸ் "நீ இங்கு விபச்சாரம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் உன்னை கைது செய்ய வந்துள்ளேன் என்றார். மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன்" என்று கூறி மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உடனடியாக வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து வந்து மர்ம நபரிடம் கொடுத்தார். ஆனால் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பணம் எடுத்து வரச்சொல்லி தனது கணவரை அனுப்பி வைத்தார். அப்போது இளம்பெண்ணை மிரட்டி படுக்கையறைக்கு அழைத்து சென்று மர்ம நபர் கற்பழித்துள்ளார். சிறிது நேரத்தில் ரூ.15 ஆயிரம் பணத்துடன் திரும்பிய இளம்பெண்ணின் கணவரிடம் இருந்து பணத்தை பறித்த மர்ம நபர், “மீண்டும் வருவேன்... மீதி பணத்தை எனக்கு நீ கொடுக்க வேண்டும்”என்று மிரட்டல் விடுத்தபடியே அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 


இதையடுத்து இளம்பெண் இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் போலீஸ் எனக்கூறி இளம்பெண்ணை கற்பழித்து பணம் பறித்து தப்பியது திருவான்மியூரை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரரான பாவுஷா (வயது28) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான பாவுஷா ஏற்கனவே வடபழனி நூறடி சாலையில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு உயர் அதிகாரிகளால் சஸ்பெண்டு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.