×

“ஜனநாயகன் படத்தை விஜய் தான் இணையத்தில் வெளியிட்டார்”- அர்ஜூன் சம்பத்

 

பாஜக அதிமுகவை பற்றி விமர்சிக்க அருகதையற்றவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி கோவில் நகரங்கள் அனைத்தையும் பாஜகவிற்கும் தாமரைக்கும் ஒதுக்கியுள்ளார். திருவண்ணாமலையில் உலக அளவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குழுவின் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்த உடன் திருவண்ணாமலை கிரிவலப் பாதை மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்த மசோதாக்கள் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பெண்கள் இட ஒதுக்கீடு தொகுதி மறு வரையறை ஆகிய சட்டங்களை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.

நடிகர் விஜய் தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி அடித்து வீசுகிறார், அவரது ஜனநாயகன் படத்தை அவரே ரிலீஸ் செய்து கொண்டார். பாஜக மற்றும் அதிமுகவை விமர்சிக்க அருகதை அற்றவர் ஜோசப் விஜய் என்றும் சாடினார். பாஜகவின் முகமூடியாக அதிமுக செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் சுமூகமாக இருந்தால் தான் நல்ல வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் என்றும் வளமான தமிழகம் வலிமையான பாரதம் கிடைக்கும். அதிமுக- பாஜக இயற்கையான கூட்டணி, முகமூடி என்பது தவறான பொருள்” என்று கூறினார்,