×

“ஆட்சியில் பங்கு எனக்கூறியும் விஜய்யுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை”- அர்ஜூன் சம்பத்

 

நடிகர் விஜய் உட்பட அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை , பேராவூரணி ஆகிய தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத், “நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை,  தமிழகம் வரவுள்ள  பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்த பிறகு மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கையை வைக்கிறேன். 
 
நடிகர் விஜய் அரசியல் கட்சி தலைவராக வெற்றி பெறவில்லை, நடிகராக வெற்றி பெற்றிருக்கிறார், அவரை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது, விஜய் தனது கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு என்று கூறினார், ஒரு கட்சி கூட அவரிடம் கூட்டணிக்கு  சேரவில்லை, அனைத்து தொகுதியிலும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள், ஜோசப் விஜய் உள்பட டெபாசிட் இழப்பார்கள்” என்றார்.