×

இளைஞர்களே ரெடியா..? இன்று TCS ஐடி நிறுவனத்தில் இண்டர்வியூ இருக்கு..!

 
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனும் டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Sourcing & Procurement பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10, பிளஸ் 2 முடித்து கல்லூரியில் ஏதாவது ஒரு படிப்பை விண்ணப்பம் செய்வோர் முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 8 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக சோர்ஸிங், காண்ட்ராக்டிங், மற்றும் புரோகயர்மென்ட் (Procurement) ஆபரேஷன்ஸ் (PR to PO) புராசஸில் அனுபவம் இருக்க வேண்டும். இன்டர்நேஷனல் சப்ளையர்கள்/கஸ்டமர்களுடன் டீலிங் செய்த அனுபவம் இருக்க வேண்டும். ஐரோப்பா சோர்ஸிங் மற்றுமு் புரோகயர்மென்ட்-டில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். Price & bid அனலிசிஸ், டிராப்டிங் மற்றும் மேனேஜிங் காண்ட்ராக்ட்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் கண்டிப்பாக EPCN எண் ஜெனரேட் செய்ய வேண்டும்.

இந்த பணியை எடுத்து கொண்டால் நைட் ஷிப்ட் உள்ளது. 24X7 என சுழற்சி முறையில் ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 15ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு Tata Consultancy Services Ltd Sahyadri Park, Plot No 2&3, Phase 3, Rajiv Gandhi infotech Park, Maan, Hinjewadi, Pune 411057 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் புனேவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.