×

அரசு ஊழியர்களே ஒட்டு போட போறீங்களா..? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அத்தியாவசிய சேவையில் உள்ள பணியாளர்கள் (Service Voters) தங்களது தபால் வாக்குச்சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்பும் ETPBMS (Electronically Transmitted Postal Ballot Management. System) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (Returning Officers) ETPBMS ໙ Service Voter- கள் தபால் வாக்குச்சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்புவார்கள். அதன் பின்னர். Service Voter-கள் தங்களுக்கு கிடைக்கும் தபால் வாக்குச்சீட்டில் விருப்பமான வேட்பாளருக்கு வாக்களித்து, தேவையான அறிவிப்புகள் (Form 13A), உள்ளக உறை (Form 13B). வெளிப்புற உறை (Form 13C) மற்றும் வழிமுறைகள் (Form 13D) ஆகியவற்றுடன் முறையாக பூர்த்தி செய்து மீண்டும் அனுப்ப வேண்டும்.

மேலும், ETPBMS மூலம் அனுப்பப்படும் தபால் வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பான முறையில் (secured system) அனுப்பப்படுவதுடன், ஒவ்வொரு வாக்கும் சரிபார்ப்பு செயல்முறைகள் (QR Code / e-PBID) மூலம் உறுதி செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசையில், தபால் வாக்குகளுக்கான விதிமுறைகளின்படி எண்ணப்படும். மேலும், விதிமுறைகளுக்கு ஏற்ப பெறப்பட்ட சரியான தபால் வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
எனவே, Service Voter-கள் அனைவரும் ETPBMS வழிமுறைகளை முறையாக பின்பற்றி தங்களது வாக்குரிமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 -ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்து கீழ்கண்ட வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.

வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை சுதந்திரமாகவும், தடையின்றியும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 62-இன் படி வாக்குப்பதிவு நாளில் அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கான ஆளறி அட்டைகளுடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீலகிரி மாவட்ட மக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை.
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் (MGNREGA) பணி அடையாள அட்டை.
3. புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
4. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை/ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை.
5. ஒட்டுநர் உரிமம்.
6. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card).
7. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் លរ ញ (Smart card issued by RGI and NPR).
8. இந்தியக் கடவுச்சீட்டு (Passport)
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
10. மத்திய/மாநில நிறுவனங்கள்/ நிறுவனங்களின் அரசுகள்/ பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட பொது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை.
11. பாரளுமன்ற/சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
12 இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.

மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது அடையாள ஆவணங்களை சரிபார்த்து, வாக்களிக்கும் நாளில் கட்டாயம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் நடைபெறும் நாளில் ஒழுங்கும், அமைதியும் காத்திட அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.