☰
×

தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா..?  சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

 

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தாம்பரம்- தென்காசி/செங்கோட்டை- தாம்பரம், சென்னை சென்ட்ரல்- போத்தனூர்- சென்னை கடற்கரை, எர்ணாகுளம்- சென்னை எழும்பூர்- எர்ணாகுளம், தாம்பரம்- மானாமதுரை- தாம்பரம், திருநெல்வேலி- தாம்பரம்- திருநெல்வேலி ஆகிய சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 01ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது.

தாம்பரம்- தென்காசி, செங்கோட்டை- தாம்பரம் சிறப்பு ரயில்கள்

அக்.01 அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தென்காசி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06123), மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தென்காசியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்.04- ஆம் தேதி மாலை 05.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06124), மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும்.

சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

சென்னை சென்ட்ரல்- போத்தனூர்- சென்னை கடற்கரை சிறப்பு ரயில்கள்

அக்.01 அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் போத்தனூர் சிறப்பு ரயில் (06023), மறுநாள் காலை 09.15 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்.04- ஆம் தேதி மாலை 06.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சென்னை கடற்கரை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06024), மறுநாள் அதிகாலை 04.00 மணிக்கு சென்னை கடற்கரையைச் சென்றடையும்.

சிறப்பு ரயில்கள், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.