நகை அடகு வைக்கப் போறீங்களா? இந்த வங்கியில தான் வட்டி ரொம்ப கம்மி!
மக்கள் தங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும்போது வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்து வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இது எளிதாகவும் இருக்கிறது. பணத்துக்கு மற்றவர்களை சார்ந்திருப்பதை கையில் உள்ள நகையை வைத்து பணம் பெறுவது சிறந்தது என்று பலர் நினைக்கின்றனர்.
நகையை அடகு வைக்க நகை அடகுக் கடைக்கு பலர் செல்கின்றனர். அடகு கடைகளில் மிக விரைவாக பணம் கிடைத்துவிடும். நகையைக் கொடுத்தவுடன் 10 நிமிடங்களில் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் வங்கிகளில் அடகு வைக்கும் போது சில மணி நேரங்கள் ஆகலாம். அதேநேரம், வங்கிகளில் வட்டி குறைவாக இருக்கும். மிக முக்கியமாக அடகு வைக்கும் நகை மிகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். பொதுத்துறை வங்கிகள் மற்ற தனியார் நிதி நிறுவனங்களை விடக் குறைவான வட்டியை வழங்குகின்றன.
நகைக் கடனுக்கு வங்கிகள் தற்போது வழங்கும் வட்டி விகிதங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியன் வங்கி - 8.65% முதல் 9.75%வரை
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா- 8.75% முதல் 9.50% வரை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 8.20% முதல் 11.60% வரை
கனரா வங்கி - 8.75% முதல் 10.25% வரை
யூனியன் வங்கி -8.85% முதல் 10.00% வரை
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி - 9.50% முதல் 11.00%வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி - 8.35% முதல்
நீங்கள் விவசாய நகைக் கடன் வாங்க நினைத்தால் நீங்கள் ஒரு விவசாயி என்பதற்கான ஆதாரமாக பட்டா, சிட்டா வைத்திருந்தால் பல வங்கிகள் 7.00 சதவீதம் என்ற மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. எனவே இந் த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த வட்டியில் அதிக நகைக் கடன் பெறலாம்.
நீங்கள் வங்கியில் வாங்கும் நகைக் கடனுக்கு 12 மாத முடிவில் வட்டி மற்றும் அசலை மொத்தமாகச் செலுத்தலாம். மாத மாதம் அசல் மற்றும் வட்டியைச் செலுத்தலாம். அல்லது ஒவ்வொரு மாதமும் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து வட்டித் தொகை தானாக பிடித்தம் செய்யும் ஆப்சனையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
நகைக் கடனுக்கான வட்டி தவிர நகை மதிப்பீட்டாளர் கட்டணம் மற்றும் செயலாக்கக் கட்டணமும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை வசூலிக்கப்படும். சில நிதி நிறுவனங்கள் இதை விட அதிகமாகவும் வசூலிக்கலாம்.
நகைக் கடன் வாங்க எந் த வங்கியில் கணக்கு உள்ளதோ அந் த வங்கியின் கணக்கு பாஸ்புக் தேவை. உங்களுடைய கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கப்பட்டிருக்க வேண்டும். உங்களுடைய ஆதார் அட்டை அவசியம். அதேபோல பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவைப்படும். விவசாயக் கடன் பெறுவதாக இருந்தால் விவசாயச் சான்று தேவை.
பொதுவாக, நகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிகளின் சந்தை நிலவரத்தைப் பொறுத்து அவ்வப்போது மாறும். எனவே, வங்கிக் கிளைக்கு நேரில் சென்று தற்போதைய வட்டி விகிதத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதன் பிறகு நகையை அடகு வைக்கலாம்.