☰
×

தங்கம் வாங்க போறீங்களா? நில்லுங்க! இன்றைய நிலவரம் பார்த்து அதிர்ச்சி அடையாதீங்க!

 

நமது நாட்டில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பலர் நகைகள் வாங்குவதிலும், சிறு அளவில் தங்கம் மீது முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தில் தங்கம் விலை ஏறி வருவது நகைப்பிரியர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது.

தங்கம் விலை இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக தொடர்ந்து 3 நாட்களாக விலை அதிகரித்து வருகிறது. இதற்கு உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மை, பண வீக்கம், வேலை வாய்ப்பின்மை, டாலர் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்பிருந்த அதே வட்டி விகிதத்தையே தொடரலாம் என முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

இந்த முடிவுக்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகளின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்து வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாகவும் தொடர்கிறது.

தங்கம் கடந்த 4 நாட்களில் ரூ.5,240 உயர்ந்துள்ளது.